/உள்ளூர் செய்திகள்/மதுரை/தண்ணீரில் மின்வாரிய அலுவலகம் தத்தளிப்புதண்ணீரில் மின்வாரிய அலுவலகம் தத்தளிப்பு
தண்ணீரில் மின்வாரிய அலுவலகம் தத்தளிப்பு
தண்ணீரில் மின்வாரிய அலுவலகம் தத்தளிப்பு
தண்ணீரில் மின்வாரிய அலுவலகம் தத்தளிப்பு
ADDED : ஜன 11, 2024 04:27 AM

மேலுார் : மேலுார்- - திருவாதவூர் ரோட்டில் நகராட்சி கண்மாயில் இருந்து கசியும் தண்ணீர் மின் அலுவலகம், வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: சாலக்கரையான் கண்மாய் நிரம்பி கசியும் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடப்பதால் முடங்கி கிடக்கிறோம். தண்ணிரில் கொசு உற்பத்தியாவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என்றனர்.
நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் கூறுகையில், தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.