/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் ஆக.,2ல் அமர்க்களமாக ஆரம்பமாகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சிமதுரையில் ஆக.,2ல் அமர்க்களமாக ஆரம்பமாகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
மதுரையில் ஆக.,2ல் அமர்க்களமாக ஆரம்பமாகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
மதுரையில் ஆக.,2ல் அமர்க்களமாக ஆரம்பமாகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
மதுரையில் ஆக.,2ல் அமர்க்களமாக ஆரம்பமாகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி

250 ஸ்டால்கள்
கண்காட்சியில் தமிழக ஸ்டால்களுடன் வெளிநாடு, வெளி மாநிலத்தை சேர்ந்தவை என 250 'ஏசி' ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. தமுக்கத்தில் உள்ளே நுழைந்தால் 'இது நம்ம மதுரையா...' என ஆச்சரியத்தை ஏற்படுத்தி, ஹைடெக் மெகா ஷாப்பிங் உலகத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்படும்.
ஏராளமான பொருட்கள்
கண்காட்சின்னா வெறும் பொருட்களை மட்டும் தான் வச்சிருப்பாங்கனு நினைக்க வேண்டாம். கடல் மாதிரி கடைகள் விரிந்து பரந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 10 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் விலை வரை உங்களுக்கு ஏற்ற பொருட்களை வாங்கலாம். ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் போன், அலங்கார மின் விளக்குகள், கொசு வலை என எந்த பொருளும் வாங்கலாம். தள்ளுபடி, இலவசத்தோடு சாம்பிள் பொருட்களும் அள்ளித் தருவாங்க.
ருசியான உணவுகள்
ஸ்டால் ஸ்டாலாக பார்த்து ஷாப்பிங் செய்து சோர்ந்து விட்டால் என்ன செய்ய என கவலை வேண்டாம். புட்கோட்க்குள் புகுந்து கமகமக்கும் வகை வகை உணவுகளை ஒரு கை பார்க்கலாம். மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிங்கர் பிஷ், பிஷ் பிரை என வகை வகை உணவுகளை ருசிக்கலாம். ஸ்டால்களில் போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி என சாப்பாட்டு வகைகள் வரிசை கட்டியிருக்கும்.
போத்தீஸ் கேம் ேஸான்
கண்காட்சியில் குட்டீஸ்களை குஷிப்படுத்தும் போத்தீஸ் கேம் ஸோன் களைகட்டும். உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க பேட்டரி கார், வாட்டர் போட், சிக்குபுக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, பலுான் சூட்டிங், ஒட்டக சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் காத்திருக்கின்றன.