வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சிறுவன்
வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சிறுவன்
வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சிறுவன்
ADDED : மே 21, 2025 06:10 AM
சோழவந்தான் : சோழவந்தானில் மே 12ல் அழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில் சோழவந்தான் அய்யனார் 17, காரியாபட்டி ஜெயவசீகரன் 16, ஆற்றில் குளித்தனர். அப்போது நீரில் மூழ்கி தத்தளித்த இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஜெயவசீகரன் இறந்தார்.
தொடர் சிகிச்சையால் குணமடைந்த அய்யனார் 'டிஸ்சார்ஜ்' ஆகி நேற்று சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு வந்து வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ராமனும் பாராட்டினார்.