கர்நாடகாவில் தமிழக மாணவர்கள் சாதனை
கர்நாடகாவில் தமிழக மாணவர்கள் சாதனை
கர்நாடகாவில் தமிழக மாணவர்கள் சாதனை
ADDED : மே 30, 2025 03:59 AM

மதுரை: தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் தமிழகம் சார்பில் பங்கேற்ற மதுரை காமராஜ் பல்கலை நாட்டு நலப் பணி திட்ட அணியினர் பரிசுகளை அள்ளினர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இம்முகாம் நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை அணி சார்பில் தியாகராஜர் கல்லுாரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரி, அமெரிக்கன் கல்லுாரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
முகாமில் கிராமங்களில் கல்வி, சுகாதார விழிப்புணர்வு, மரம் நடுதல், அரசின் திட்டங்களை எடுத்துரைத்தல் போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
இதில் தமிழக மாணவர்கள் ரங்கோலி, குழு நடனம், நாட்டுப்புற நடனம், பழங்குடியினர் நடனம் ஆகியவற்றில் பரிசுகளை வென்றனர். இம்மாணவர்களை தியாகராஜர் கல்லுாரி திட்ட அலுவலர் முருகன் வழிநடத்தினார். இவர்களை பெங்களூரு மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குனர் காம்ப்ளி, ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி, கனகப்பா பூஜார் பாராட்டினர்.
ஏற்பாடுகளை பெங்களூரு என்.எஸ்.எஸ்., திட்ட மண்டல இயக்குனரகம், பெலகாவி ராணி சென்னம்மா பல்கலை, பெலகாவி பழங்குடியினர் நலத்துறையினர் செய்திருந்தனர்.