ADDED : பிப் 25, 2024 04:51 AM
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் தமிழ் இலக்கிய பெருவிழா நடந்தது. பேராசிரியர் லட்சுமி இறைவணக்கம் பாடினார்.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் குபேந்திரன் வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் தொடக்க உரையாற்றினார். மனிதவள மேம்பாட்டில் கலைகளின் பங்கு என்ற தலைப்பில் குறும்பட இயக்குநர் சுதாகர் ஜெயராமன், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் பாரி பரமேஸ்வரன் பேசினர். கல்லுாரி தலைவர் மோதிலால், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமசுப்பிரமணியன், முரளிதாஸ், வெங்கடேஸ்வரன், பேராசிரியர்கள் விஜயகுமார், வெங்கடேஷ், சரவணன், சுபாஷினி, ஜெயந்தி, நந்தினி, மகாலட்சுமி கலந்து கொண்டனர்.
பேராசிரியர் ஊர்மிளா தொகுத்துரைத்தார். பேராசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.