ADDED : செப் 23, 2025 04:27 AM
மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான தமிழக அணி டேக்வாண்டோ போட்டிக்கான மாநில அளவிலான மாணவர்கள் தேர்வு மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தியாகராஜர் மாடல் பள்ளி மாணவர் ஜோயல் 14 வயதுக்குட்பட்டோருக்கான 18 கிலோ எடை பிரிவுக்கு தமிழக அணி சார்பில் தேர்வானார். இவர் அக்., 28ல் நாகாலாந்தில் நடக்கும் தேசிய டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கிறார்.
தலைமையாசிரியர் அறிவழகன், உடற்கல்வி இயக்குநர் மகாலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் அசோக், சந்திரசேகர் பாராட்டினர்.
17 வயதுக்குட்பட்டோருக்கான 73 கிலோ பிரிவில் மதுரை செயின்ட் ஜான் பள்ளி மாணவர் ஸ்ரீராம் பாண்டியன் தேர்வானார். இவர் அக்., முதல் வாரத்தில் அருணாசலபிரதேசத்தில் நடக்க உள்ள தேசியப் போட்டிக்கு தேர்வானார். முதல்வர் ஆண்டனி ப்ரிமோஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கமுருகன், பெருமாள் பாராட்டினர்.