ADDED : ஜன 03, 2024 06:23 AM

மதுரை: கொடைக்கானலில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே இந்தியா சார்பாக 4வது கோடைகப் கராத்தே போட்டி நடந்தது.
தலைமை நடுவராக இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் செயல்பட்டார். கராத்தே பள்ளி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் செந்தில், கார்த்திக், கார்த்திகேயன், அங்குவேல், பாலகாமராஜன், முத்துராஜா, தணிகைவேல் முருகன் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து பங்கேற்ற மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்றனர். 11 வயது கட்டா பிரிவில் தியாகராஜர் மாடல் பள்ளி சுப்ரமணியன், 12 வயது பிரிவில் வேலம்மாள் போதி கேம்பஸ் செல்வமணிகண்டன், 13 வயது பிரிவில் லீ சாட்லியர் பள்ளி கபிலாஷ் கண்ணன், 16 வயது கட்டா பிரிவில் சவுராஷ்டிரா பள்ளி முத்துபவித்ரா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
இ.பி.ஜி. பள்ளி சுபிக் சன் 9 வயது பிரிவிலும், 10 வயது பிரிவில் இளங்கோ, இனியன், 11 வயது பிரிவில் கோபி, 12 வயது பிரிவில் டானியல் தங்கப்பதக்கம் வென்றனர்.
13 வயது குமித்தே பிரிவில் வேலம்மாள் போதி கேம்பஸ் கவின் ராம் தங்கம் வென்றார். இ.பி.ஜி. பள்ளி யுகன் 12 வயது பிரிவிலும் 15 வயது பிரிவில் ராஜ்குமார், 17 வயது பிரிவில் ஆதி தங்கம் வென்றனர்.