/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பேராசிரியராக மாணவிகள் மாணவியராக பேராசிரியர்கள் பேராசிரியராக மாணவிகள் மாணவியராக பேராசிரியர்கள்
பேராசிரியராக மாணவிகள் மாணவியராக பேராசிரியர்கள்
பேராசிரியராக மாணவிகள் மாணவியராக பேராசிரியர்கள்
பேராசிரியராக மாணவிகள் மாணவியராக பேராசிரியர்கள்
ADDED : செப் 15, 2025 05:51 AM
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் மற்றும் உயராய்வு மையம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். இதில் ஒருநாள் பேராசிரியர்கள், மாணவியர்களாகவும், மாணவர்கள் பேராசிரியர்களாகவும் பொறுப்பேற்று கொண்டாடினர். துறைத் தலைவர் சுரேஷ்பாபுவுக்கு பதிலாக எம்.காம்., 2ம் ஆண்டு மாணவி சுந்தரவல்லி துறைத் தலைவராக பொறுப்பேற்று மாணவர்களை (பேராசிரியர்களை) வழி நடத்தினார்.
பேராசிரியர்கள் அற்புதராஜ், கீதா கோதை நாச்சியார், தேவிகா, ராதிகா, பாலசத்தியா, கஜப்பிரியா, சாய்மோகனா, பாண்டீஸ்வரி, செல்வமூர்த்திக்கு பதிலாக மாணவர்கள் திருமலைராஜா, பாண்டிச்செல்வி, முத்துமீனா, அங்காள ஈஸ்வரி, ரிஷிகா, விஷாலினி, சிவகஜேந்திரன், சுபி க் ஷாதேவி, சோமசுந்தரம், பிரசன்னா ஆசிரியர்களாக பொறுப்பேற்றனர்.
பேராசிரியராக மாறிய மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் தயாரித்து பாடம் நடத்தினர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ஆழமான கல்வி உறவை வளர்ப்பது, கற்பித்தலின் பொறுப்புகள், சவால்களை மாணவர்கள் புரிந்து கொள்வது, அவர்கள் தனித்துவமாக செயல்பட இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என முதல்வர் ராம சுப்பையா தெரிவித்தார்.