/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அக்டோபர் முழுதும் போராட்டம் நிலஅளவை அலுவலர்கள் எச்சரிக்கை அக்டோபர் முழுதும் போராட்டம் நிலஅளவை அலுவலர்கள் எச்சரிக்கை
அக்டோபர் முழுதும் போராட்டம் நிலஅளவை அலுவலர்கள் எச்சரிக்கை
அக்டோபர் முழுதும் போராட்டம் நிலஅளவை அலுவலர்கள் எச்சரிக்கை
அக்டோபர் முழுதும் போராட்டம் நிலஅளவை அலுவலர்கள் எச்சரிக்கை
ADDED : செப் 15, 2025 05:50 AM
மதுரை : நிலஅளவை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபரில் பல்வேறு போராட்டங்ளை நடத்த தீர்மானித்துள்ளனர்.
தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியிடங்களை மீண்டும் பெற்றுத் தரவேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை முடிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும்.
லைசென்ஸ் சர்வே முறை மற்றும் வெளிமுகமை புல உதவியாளர் உள்ளிட்ட பணிகளை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். காலதாமதத்தைப் போக்கும் வகையில் உட்பிரிவு மனுக்கள் இணைய வழியில் மட்டுமே பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை பலன் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ரகுபதி கூறியதாவது: கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் அக்.7 , 8 ல் இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம், அக்.13 முதல் 17 வை வேலை நிறுத்த ஆயத்த மாநாடு பிரசார இயக்கம், அக்.25ல் மதுரையில் பேரணி, வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம். திருவண்ணாமலையில் மாநில தலைவர் ராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்க பட்டுள்ளது, என்றார்.