ADDED : பிப் 06, 2024 07:32 AM

மதுரை : மதுரை கல்லுாரி மைதானத்தில் கே.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் யுனைடெட் கலாம் பவுண்டேஷன் வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட் முயற்சிக்காக மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடந்தது. நிறுவன தலைவர் செந்துார் பாண்டி துவக்கி வைத்தார்.
75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் 75 நிமிடம் 75 செகண்ட் சிலம்பம், கராத்தே செய்து அசத்தினர்.
ஏற்பாட்டை கார்த்திக், கணேசன், கண்ணன் பயிற்சியாளர்கள் முனீஸ்வரன், வனிதா செய்திருந்தனர்.