ADDED : பிப் 06, 2024 07:25 AM

மேலுார் : விருதுநகரில் ஸ்கொலர்ஸ் மேட் செஸ் அகாடமி சார்பில் மாநில செஸ் போட்டி நடந்தது.
மேலுார், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 3ம் வகுப்பு மாணவி இஸ்பாடுஜானா 7 சுற்றுகளில் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அதே பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர் குருபாண்டியன் 6 சுற்றுகளில் 5 புள்ளிகள் பெற்று 4ம் இடத்தை வென்றார். இருவரையும் தலைமையாசிரியர் மணிமேகலை, பயிற்சியாளர் செந்தில்குமார் பாராட்டினர்