/உள்ளூர் செய்திகள்/மதுரை/'மின் உரிமத்தை ஆன்லைனில் பெற நடவடிக்கை தேவை' மின் அமைப்பாளர்கள் வலியுறுத்தல்'மின் உரிமத்தை ஆன்லைனில் பெற நடவடிக்கை தேவை' மின் அமைப்பாளர்கள் வலியுறுத்தல்
'மின் உரிமத்தை ஆன்லைனில் பெற நடவடிக்கை தேவை' மின் அமைப்பாளர்கள் வலியுறுத்தல்
'மின் உரிமத்தை ஆன்லைனில் பெற நடவடிக்கை தேவை' மின் அமைப்பாளர்கள் வலியுறுத்தல்
'மின் உரிமத்தை ஆன்லைனில் பெற நடவடிக்கை தேவை' மின் அமைப்பாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 01, 2024 05:46 AM

மதுரை: மின்உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் வழங்குவதை ஆன்லைனில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, மதுரை சிக்கந்தர் சாவடியில் நடந்த மின் அமைப்பாளர்கள் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தினர்.இந்த மாநாடு சிக்கந்தர் சாவடியில் வேளாண் உணவு வர்த்தக மைய அரங்கில் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
செயலாளர் ரவிமோசஸ் வரவேற்றார். மாநில தலைவர் ஜெயபால், பொது செயலாளர் கோவிந்தன், அமைப்பு செயலாளர் யோகநாதன், திட்டச் செயலாளர் பாக்கியம் பேசினர். பொதும்பு ஊராட்சி தலைவர் சாந்தி, கே.எல்.என்., முதன்மை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி பங்கேற்றனர்.
மின்உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் வழங்குதல் ஆகியவற்றை ஆன்லைனில் பெற நடவடிக்கை தேவை. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மின்னிணைப்பு பெறுதல் உள்ளிட்ட விண்ணப்பங்களை மின்ஒப்பந்ததாரர்களிடம் ஒப்புதல் பெற்று வழங்க வேண்டும்.
ஒய்வூதியம், இறப்புக்கு பின் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். மின்கம்பி உதவியாளர்கள் சான்று பெற ஆண்டுதோறும் வாய்மொழித் தேர்வு நடத்த வேண்டும். வணிக பயன்பாட்டிற்கு ஆயிரம் சதுர அடி கட்டட வரைவுச் சான்று அவசியம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. கிளைத் துணைத் தலைவர் மாதவன் நன்றி கூறினார்.