ADDED : பிப் 25, 2024 04:08 AM

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் முத்தையா அம்பலம் நினைவு மாநில வாலிபால் போட்டி நடந்தது.
மதுரை, காரைக்குடி, சிவகங்கை, சிவகாசி, சென்னை, கோவை, திருச்சியைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டன. லீக் பிரிவிற்கு கோவை டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி, கோவை கற்பகம் பல்கலை, சென்னை சத்யபாமா பல்கலை மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லுாரி அணிகள் தகுதி பெற்றன.
முதல் போட்டியில் என். ஜி. பி. கல்லுாரி 3-0 புள்ளிகளில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் கற்பகம் பல்கலை 3-1 புள்ளிகளில் சத்தியபாமா பல்கலையை வீழ்த்தியது.
மூன்றாவது போட்டியில் என். ஜி. பி.கல்லுாரி 3-1 புள்ளிகளில் சத்தியபாமா பல்கலையை வீழ்த்தியது. நாலாவது போட்டியில் கற்பகம் அணி 3-1 புள்ளிகளில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தியது. ஐந்தாவது போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 3-1 புள்ளிகளில் சத்தியபாமா பல்கலையை வீழ்த்தியது. கடைசி போட்டியில் என்.ஜி.பி. கல்லுாரி 3-0 புள்ளிகளில் கற்பகம் பல்கலையை வீழ்த்தியது. புள்ளிகள் அடிப்படையில் கற்பகம் பல்கலை அணி முதலிடம் பெற்று ரூ.25ஆயிரம், கேடயத்தை வென்றது. டாக்டர் என்.ஜி.பி கல்லுாரி ரூ.15 ஆயிரம், அமெரிக்கன் கல்லுாரி ரூ.10ஆயிரம், சத்தியபாமா பல்கலை ரூ.7000 வென்றன.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் பங்கேற்றனர்.
உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.