ADDED : மார் 25, 2025 04:48 AM

மதுரை: மதுரையில் தேசிய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் (என்.எப்.ஐ.ஆர்.,) தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்.,) மதுரை கோட்டம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் சென்ன கிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் பிரபு முன்னிலை வகித்தார்.
செயலாளர் நாகேந்திரன் கோரிக்கைகளை விளக்கினார்.
எட்டாவது ஊதியக் குழுவை அமைத்து 2026 ஜன., 1 முதல் அமல்படுத்த வேண்டும்.
ரயில்வே பணியிடங்களில் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கிளைச் செயலாளர்கள் பாண்டியராஜன், ஆனந்த்பாபு, ஷாஜகான், கண்ணன், ரயில்வே ஓய்வூதியர் சங்க கோட்டப் பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.