ADDED : மார் 25, 2025 04:48 AM

மதுரை: மதுரை செந்தாமரை கல்லுாரியில் நடந்த தென்னிந்திய கராத்தே போட்டியில் மாடக்குளம் ரூபி மழலையர் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முகேஷ் முதல் பரிசு, ஆஷிஷ் புத்தா, ஆஷிபா இரண்டாம் பரிசு, ஹசனா, துவாரகேஷ், மூன்றாம் பரிசு வென்றனர்.
பசுமலை மன்னர் திருமலை நாய்க்கர் கல்லுாரியில் நடந்த சிலம்பப் போட்டியில் பழங்காநத்தம் ரூபி மெட்ரிக் பள்ளி மாணவர் பிரவீன் முதல் பரிசு பெற்றார். லீயோ, கார்த்திகேயன் இரண்டாம் பரிசும், சிவகார்த்தி, கிருத்திக்கேஸ்வர் மூன்றாம் பரிசு வென்றனர். மாணவர்களை தாளாளர் வெங்கடேசன், பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.