ADDED : மே 15, 2025 02:15 AM
உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் மணிமண்டபம் அமைக்கும் இடத்திற்கு தடையில்லாச் சான்று வழங்கும் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நகராட்சி கவுன்சில் சிறப்புக்கூட்டம் நடந்தது.
துணைத்தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் சக்திவேல், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், தி.மு.க., ஆட்சியில் வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர் பூமாராஜா தலைமையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டடம் மற்றும் கள்ளர் விடுதி பகுதியில் மூக்கையாத்தேவர் மணிமண்டபம் அமைக்க தடையில்லாச் சான்று வழங்குதல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.