ADDED : மே 30, 2025 03:55 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா கெஞ்சம்பட்டி, மோதகத்தில் 'உழவரைத் தேடி' வேளாண்மை -உழவர் நலத்துறை திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
இதில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை, விதை மற்றும் அங்கக சான்றுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். உளுந்து, பருத்தி விதை, உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.