ADDED : ஜூன் 04, 2025 01:24 AM
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி கிளை நுாலகத்திற்கு 1990ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் உள்பகுதி, வெளிப்பகுதிகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
உட்புறம் மேல் தளத்திலிருந்து சிமென்ட் பூச்சுகள் விழுந்தன. கட்டடம் முழுவதுமாக சேதமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கட்டடம் சீரமைக்கப்பட்டது.