தினமலர் செய்தி எதிரொலியால் தீர்வு
தினமலர் செய்தி எதிரொலியால் தீர்வு
தினமலர் செய்தி எதிரொலியால் தீர்வு
ADDED : மே 15, 2025 02:12 AM
திருப்பரங்குன்றம்; மதுரை பசுமலை மயானம் மோசமாக இருக்கிறது. உடல்கள் எரியூட்டப்படாத நிலையில் பகல், இரவில் மயான வளாகம், மதுப் பிரியர்களால் திறந்தவெளி பார் ஆக பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.15 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் ரவிச்சந்திரன் பார்வையிட்டனர்.
மேலுார் : நாவினிபட்டி மாநில நெடுஞ்சாலையில் தெரு விளக்கிற்கான மின் ஒயர்கள் சேதம் அடைந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் நிலவியது. 31 தெரு விளக்குகள் வேலை செய்யாமல் நீண்ட நாட்கள் இருளில் மூழ்கிக் கிடந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் ஒயர்கள் பழுது நீக்கப்பட்டு தெருவிளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன.