/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'எரித்ரோமைசின், ரானிடிடின்' மாத்திரைகள் பற்றாக்குறை 'எரித்ரோமைசின், ரானிடிடின்' மாத்திரைகள் பற்றாக்குறை
'எரித்ரோமைசின், ரானிடிடின்' மாத்திரைகள் பற்றாக்குறை
'எரித்ரோமைசின், ரானிடிடின்' மாத்திரைகள் பற்றாக்குறை
'எரித்ரோமைசின், ரானிடிடின்' மாத்திரைகள் பற்றாக்குறை
ADDED : ஜூன் 20, 2025 03:27 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் 'எரித்ரோமைசின், ரானிடிடின்' மாத்திரை பற்றாக்குறையாக உள்ளதால் நோயாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதயநோய் வார்டில் நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் மொத்தமாக வழங்க டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மருந்து சீட்டுடன் இதயநோய் வார்டுக்கான மாத்திரை வழங்கும் இடத்திற்கு செல்லும் நோயாளிகளுக்கு 'எரித்ரோமைசின், ரானிடிடின்' மாத்திரைகள் இல்லை என்று கூறி வெளியில் வாங்க அறிவுறுத்துகின்றனர்.
மற்ற வார்டுகளுக்கான மாத்திரை வழங்கும் இடத்தில் 'ரானிடிடின்' மாத்திரைக்கு பதிலாக கூடுதல் விலையிலான 'ஒமெஸ்' வகை மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியது: மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து மாத்திரை சாம்பிள்கள் பரிசோதனை செய்து வர 20 நாட்களாகும். தமிழ்நாடு மருந்து சேவை கழகம் மூலம் முறையாக மாத்திரை தாமதமின்றி பெறுகிறோம். 'ரானிடிடின்' பற்றாக்குறையால், இருப்பு அதிகம் உள்ள பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்று நோயாளிகளுக்கு வழங்குகிறோம். 'ரானிடிடின்' இல்லாவிட்டால் மாற்று மாத்திரை வழங்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.