/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பரிகாரம் செய்வதாக கூறி ஏழு பவுன் நகை மோசடி பரிகாரம் செய்வதாக கூறி ஏழு பவுன் நகை மோசடி
பரிகாரம் செய்வதாக கூறி ஏழு பவுன் நகை மோசடி
பரிகாரம் செய்வதாக கூறி ஏழு பவுன் நகை மோசடி
பரிகாரம் செய்வதாக கூறி ஏழு பவுன் நகை மோசடி
ADDED : செப் 02, 2025 05:43 AM
மதுரை : மதுரையில் பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயினை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம் அபிராமபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை 40. இரண்டு மாதங்களுக்கு முன் விவாகரத்து ஆனோருக்கான மேட்ரிமோனியில் பதிவு செய்தார். அதே மேட்ரிமோனியில் பதிவு செய்த கலைச்செல்வன் என்பவர், மணிமேகலையை தொடர்பு கொண்டு புகைப்படம், விபரங்களை அனுப்பி, திருமணம் செய்துகொள்வதாக ஆக. 22ல் நேரில் சந்தித்து பேசினார்.
''இருவருக்கும் முன் ஜென்ம கர்மா இருப்பதால் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்'' எனக் கூறி ஆக. 27ல் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலுக்கு மணிமேகலையை அழைத்து வந்தார்.
அப்போது மஞ்சள் துணியில் வைக்கப்பட்ட பச்சரிசி மீது அவரது 7 பவுன் 2 கிராம் தாலிச் செயினை வைத்து, தனது கையோடு கொண்டுசென்ற செம்பில் வைக்கும்படி கூறினார். பின் அவரிடம் மஞ்சள் பொடியை கொடுத்துவிட்டு தாலிச் செயின் உள்ள செம்பை நுாலால் கட்டி பரிகாரம் செய்தார்.
பரிகாரத்தை முடித்தபின் மணிமேகலையை மாட்டுத்தாவணியில் பஸ் ஏற்றிவிட்டு கிளம்பினார். மணிமேகலை செம்பை திறந்து பார்த்தபோது நகை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். திடீர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.