மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச அமைதி தின கருத்தரங்கு நடந்தது.
செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். முதல்வர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். அமைதிக்கான வழிமுறை குறித்து தியாகராஜர் மேலாண்மை பள்ளி உதவிப் பேராசிரியர் நடராஜ், அமைதிப் பண்பாடு குறித்து வக்புபோர்டு கல்லுாரி முதல்வர் (ஓய்வு) அப்துல் காதிர், அமைதியை கட்டமைப்போம் தலைப்பில் திருச்சி செயின்ட் மைக்கேல் கல்லுாரி உதவி பேராசிரியர் கிருஷ்ணராஜ் பேசினர்.
தியாகராஜர் கல்லுாரி தமிழ் துறைத்தலைவர் காந்தி துரை, எழுத்தாளர் அழகர்சாமி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.