ADDED : செப் 23, 2025 04:20 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நுண்ணுயிரிகள் துறை சார்பில் காசநோயை கண்டறியும் சமீபத்திய முறைகள் என்ற தலைப்பில் சர்வதேச நுண்ணுயிர்கள் தினம் கொண்டாடப்பட்டது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா முன்னிலை வகித்தனர்.
மாணவி நந்திகா வரவேற்றார். மதுரை அரசு மருத்துவமனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன காசநோய் பிரிவு தொழில்நுட்ப அலுவலர் செந்தில்குமார் பேசினார்.
நுண்ணுயிர்கள் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நுண்ணுயிரிகள், கழிவுநீர் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பத்தில் நுண்ணுயிர்கள், மருத்துவத்துறையில் நுண்ணியிர்கள் தலைப்புகளில் போட்டி நடந்தது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். துறை தலைவர் கோபி மணிவண்ணன் ஒருங்கிணைத்தார். மாணவி கனகபூஜா நன்றி கூறினார். பேராசிரியர்கள் அரிவிஷ்ணு, ராஜ்குமார்பாரதி, சரண்யாதேவி, ஜூடித் ஏற்பாடுகள் செய்தனர்.