Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிக்க, குளிக்க தகுதியான நீர் வைகை ஆற்றில் இல்லை கருத்தரங்கில் தகவல்

குடிக்க, குளிக்க தகுதியான நீர் வைகை ஆற்றில் இல்லை கருத்தரங்கில் தகவல்

குடிக்க, குளிக்க தகுதியான நீர் வைகை ஆற்றில் இல்லை கருத்தரங்கில் தகவல்

குடிக்க, குளிக்க தகுதியான நீர் வைகை ஆற்றில் இல்லை கருத்தரங்கில் தகவல்

ADDED : மார் 23, 2025 06:49 AM


Google News
மதுரை : 'குடிக்க, குளிக்க தகுதியான நீர் வைகை ஆற்றில் இல்லை' என உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடந்த கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எல்லீஸ் நகரில் நடந்த கருத்தரங்கில் சென்னை கூத்துப்பட்டறை லட்சுமி நெறியாளராக பங்கேற்றார். பறவையியலாளர் சக்திவேல் வரவேற்றார்.

'வைகையின் பல்லுயிர்ச் சூழல் ஆய்வறிக்கை 2024', 'அரிட்டாபட்டி - தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளம்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.

அறக்கட்டளையின்சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் பேசுகையில் ''தேனி முதல் ராமநாதபுரம் வரை வைகையில் 177 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. மொத்தமுள்ள 295 கி.மீட்டரில் 116 கி.மீ.,க்கு வைகையில் மணல் பரப்பு இல்லை. இதனால் கழிவுநீர் வடிகட்டப்படாமல் சாக்கடையாகவே செல்கிறது. மணல் பரப்பை அதிகப்படுத்தினாலே வைகை நதி துாய்மையடையும்.

36 இடங்களில் தண்ணீர் பரிசோதனை செய்ததில் முதல் மூன்று தரங்களான குடிக்க, குளிக்க, சுத்திகரிப்பு செய்து குடிக்க தகுதி வாய்ந்த நீர் வைகையில் இல்லை. கழிவுகள் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டும். மூல வைகையில் காணப்படும் நீர்நாய்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் ஆறுகள் மேலாண்மை குழு ஏற்படுத்தி நதியை காக்க வேண்டும்'' என்றார்.

ஒளிப்படக் கலைஞர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, பறவையியலாளர்கள் பத்ரி நாராயணன், ரவீந்திரன், தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர் கார்த்திகேயன் பார்கவிதை, தமிழ் இலக்கிய ஆர்வலர் விஜி ஆகியோர் பேசினர். இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us