ADDED : மார் 23, 2025 06:49 AM
மதுரை : மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகர் 7வது தெரு பிள்ளை காலனி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இறந்த சிசுவை 'குப்பை' போல் வீசி சென்றவர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் தேடி வருகின்றனர்.