ADDED : செப் 04, 2025 04:56 AM
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி நுண்ணுயிர் துறை, உயிர் வேதியல் துறை சார்பில் இன்னோவேஷன்அட்வான்ஸ் இன் பயாலஜிக்கல் சயின்ஸ் என்றதலைப்பில் உலகளாவிய கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் குத்து விளக்கேற்றினார். முதல்வர் ஸ்ரீநிவாசன் துவக்கி வைத்தார். துறைத் தலைவர் அஞ்சன பிரியா வரவேற்றார். முசோரி பல்கலை பேராசிரியர் பூபாலன் அமெரிக்காவில் இருந்தும், ஜியான் ஜூ பல்கலை நானோ டெக்னாலஜி பேராசிரியர் சிவப்பிரகாஷ் சீனாவில் இருந்தும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினர்.
மதுரை கல்லுாரி பேராசிரியர் கமலதாசன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஐந்துக்கும் மேற்பட்ட பல்கலையின் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சான்றிதழ்வழங்கினார்.