ADDED : செப் 04, 2025 04:56 AM

வாடிப்பட்டி: ராமநாதபுரத்தில் தென் மண்டல ஹாக்கி தெரிவு போட்டிகள் நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யோகா, முகேஸ்வரி ஆகியோர் 17 வயது பிரிவில் மாநில ஹாக்கி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வான மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், பாண்டியம்மாள், வனிதா ஆகியோரை தலைமை ஆசிரியை திலகவதி, உதவித் தலைமை ஆசிரியை பிரேமா பாராட்டினர்.