ADDED : ஜன 11, 2024 04:24 AM
மதுரை : மதுரை மகாத்மா பள்ளிக் குழுமம், சத்ய சாய் வித்ய வாஹினி தன்னார்வ தொண்டு நிறுவனம், இஸ்ரோ இணைந்து மகாத்மா பாபா பள்ளி வளாகத்தில் 'ஸ்பேஸ் ஆன் வீல்' என்ற அறிவியல் வாகனம் காட்சிப்படுத்துதல் துவக்கவிழா நடந்தது.
இஸ்ரோ விஞ்ஞானி சீனிவாசன், குளோபல் கேர் பவுண்டேஷன் நிர்வாகி பெருமாள்சாமி நவ்ராஜ் துவக்கி வைத்தனர். பள்ளி நிர்வாகி பிரேமலதா பேசினார். மாணவர்கள் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடி விண்வெளிப் பயணம் குறித்த அரிய தகவல்களை அறிந்தனர்.