ADDED : செப் 11, 2025 05:22 AM
* கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள் மதுரை: பாத்திமா கல்லுாரியில் வேதியியல் ஆராய்ச்சி மையம் சார்பில் 'வேதியியல்-மிஸ்டிக் 25' என்ற பெயரில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தன. மதுரை காமராஜ் பல்கலை பொருள் வேதியியல் துறை பேராசிரியர் ஜெயந்திநாத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த தொடக்க உரையை வழங்கினார். சோலார் பேனல்கள் குறித்து ஆழ்ந்த நுண்ணறிவை கொடுத்தார். வேதியியல் தொடர்பான வினாடி வினா, புதிர், ரங்கோலி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சி தொடர்பான போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் அருள்மேரி பரிசு வழங்கினார். ஒட்டுமொத்த வெற்றியாளர் கேடயத்தை லேடிடோக் கல்லுாரி வென்றது. கல்லுாரி வேதியியல் ஆராய்ச்சித் துறை ஏற்பாடு செய்திருந்தனர்.
* மாதிரி நேர்காணல் தேர்வு திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் இளங்கலை 2, 3ம் ஆண்டு மாணவியருக்கு விண்டேஜ் கம்ப்ளீட் ஓபன் சோர்ஸ் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பிற்கான எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வுக்கான மாதிரி நேர்காணல் நடந்தது. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். முதல்வர் பொன்னி, நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சுகன்யா வரவேற்றார். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். பேராசிரியர் ஷெர்லி ரொவீனா நன்றி கூறினார்.
* ரோட்ராக்ட் நிர்வாகிகள் தேர்வு பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் ரோட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு, பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் பூஜா வரவேற்றார். மதுரை வடக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பொன் வெற்றிச்செல்வன், ஆலோசகர் சரவணராஜ், செயலாளர் விக்னேஷ முன்னிலையில் ரோட்ராக்ட் தலைவராக கீர்த்தனா, செயலாளராக சக்திபிரகாஷ், துணைத் தலைவராக ஹரிஹரன் பதவியேற்றனர். மாணவி ஹரிணி தொகுத்து வழங்கினார்.
* தற்கொலை தடுப்பு கருத்தரங்கு மதுரை: அரசு மருத்துவக் கல்லுாரியில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கான தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கு நடந்தது. அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு துறைத்தலைவர் கீதாஞ்சலி வரவேற்றார். டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் ராணி, மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ., சரவணன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஜான் சேவியர் சுகதேவ் தற்கொலை எண்ணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார். உதவி பேராசிரியர் அருண் பிரசன்னா உட்பட பலர் பேசினர். போஸ்டர் தயாரிப்பு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் லாய்ட்ஸ் நன்றி கூறினார்.
* பாரதியார் நினைவு கருத்தரங்கு மதுரை: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கு முதல்வர் வானதி தலைமையில் நடந்தது. பேராசிரியை பிரியதர்ஷினி வரவேற்றார். காந்தி கிராம பல்கலை பல்கலை பேராசிரியர் ஆனந்தகுமார் துவக்கி வைத்து பேசினார். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் யாழ் சந்திரா 'பாரதியும் இசையும்' என்ற தலைப்பில் பேசினார். பெருமன்றம் மாவட்டத் தலைவர் செல்லா, உதவி பேராசிரியை விஜயம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி பேராசிரியர் பாண்டி பேசினர். பேச்சு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெருமன்றம் துணைச் செயலாளர் மஞ்சுளா, துணைத் தலைவர் பேனா மனோகரன், பேராசிரியை சத்யா, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மோகன் துரைச்சாமி, தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.