ADDED : செப் 11, 2025 05:22 AM
திருமங்கலம் : திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் கிளை அலுவலகத்தில் தலைவர் மகபூப் பாட்ஷா தலைமையில் நடந்தது. செயலாளர் அறிக்கையை ரகுநாதன், பொருளாளர் அறிக்கையை பாலகிருஷ்ணன் வாசித்தனர்.
திருமங்கலம் நகரில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முழுமையாக மூட வேண்டும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலோசகர்கள் வெங்கட கிருஷ்ணன், பிலாவடியான், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைப்பு செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.