Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

ADDED : பிப் 12, 2024 05:05 AM


Google News
பள்ளிகளில் ஆண்டு விழா

மதுரை: எஸ்.எஸ்.காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியின் ஆண்டு விழா கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். மாகநராட்சி கவுன்சிலர் செல்வி முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் தானேஸ்வரி, தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில தலைவர் கர்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் ஜெயந்தி, முருகலட்சுமி தொகுத்து வழங்கினர். பள்ளி மேலாண்மை குழுஉறுப்பினர் பரிதாபேகம், ஆசிரியர்கள் ரீட்டா நித்யா, அனிதா, ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

* பழங்காநத்தம் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா தலைமையாசிரியை மெர்சி தலைமையில் நடந்தது. திடீர் நகர் போலீஸ் உதவி கமிஷனர் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து அணிவகுப்பை ஏற்றார்.சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் பேசினார். பள்ளித் தாளாளர் ஜோசப் செல்வராஜ் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் ஒருங்கிணைதார்.

* வண்டியூர் தொடக்க பள்ளி ஆண்டு விழா தலைமையாசிரியர் ஹெலன் தெரசா தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராஜு, வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சி, எஸ்தர் இந்திராணி கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரயிஷா, பாலு, ஆசிரியைகள் செய்து இருந்தனர்.

* மதுரை கார்சேரி கிழக்கு ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆண்டு விழா ஊராட்சி தலைவர் பாண்டிஸ்வரி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியை சிவகாமி, ஒருங்கிணைப்பாளர்கள் அன்னலட்சுமி, ஆசிரியைகள் கலைவாணி, அனுராதா, சுமதி பேசினர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்றனர். அன்பு நன்றி கூறினார்.

வாடிப்பட்டி: அய்யங்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. அலங்காநல்லுார் வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துச்செல்வி, வட்டார வள மைய பயிற்றுனர் அன்புச்செல்வி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை காளீஸ்வரி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் அமலி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் குமரேசன், பீமா ஜான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தனித்திறன் போட்டிகள் நடந்தன. ஆசிரியர் பழனியம்மாள் நன்றி கூறினார்.

கல்லுாரி விளையாட்டு விழா

மதுரை: திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லுாரி விளையாட்டு விழா கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டி வரவேற்றார்.உடற்கல்வி இயக்குனர் நிரேந்தன், உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் விளையாட்டு ஆண்டு அறிக்கை வாசித்தனர். கல்லுாரிச் செயலர் சுவாமி வேதானந்த,சுவாமி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். சுரேஷ் கண்ணன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ராமகிருஷ்ண தபோவன செயலர் சுவாமி ஸத்யானந்த, சுவாமி அபேதானந்த, பள்ளிச் செயலர் சுவாமி பரமானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர், அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, பள்ளித் தலைமை ஆசிரியர் மாதவன் பங்கேற்றனர். மாணவர் மாஸ்டர் யோகேஷ் நன்றி கூறினார்.

இதழியல் கருத்தரங்கு

மதுரை: பாத்திமா கல்லுாரியில் இதழியல், மக்கள் தொடர்பியல் துறை சார்பில் 'ஸ்பெக்ட்ரம் 2024' எனும் கருத்தரங்கு துறைத் தலைவர் சுமேதா தலைமையில் நடந்தது. மாணவி ஹரிணி வரவேற்றார். சினிமா இயக்குநர் சையத் கவுதம்ராஜ் துவக்கி வைத்து பேசுகையில், ''நாம் எப்போதும் ஜீரோவாகத்தான் இருக்கிறோம் என நினைத்து பல விஷயங்களை கற்றுக்கொண்டால் ஹீரோவாகி விடலாம். மீடியாவில் பெண்களுக்கும் அதிகம் வாய்ப்புகள் உள்ளன'' என்றார்.

16 கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தன. காரைக்குடி நாச்சியப்பா சுவாமிகள் கலைக் கல்லுாரி சுழற்கேடயம் வென்றது. மதுரை அமெரிக்கன் கல்லுாரி இரண்டாம் இடம் வென்றது. உதவி பேராசிரியைகள் கிளாடியஸ் ரஞ்சனி, ஜெனோ மேரி ஏற்பாடு செய்தனர். மாணவி வேத ஸ்மிருதி நன்றி கூறினார்.

அறிவியல் கண்காட்சி

சோழவந்தான்: எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எம்.வி.எம்., குழுமத் தலைவர் மணிமுத்தையா தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் வள்ளி மயில் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார். தாளாளர் மருதுபாண்டியன் துவக்கி வைத்தார். தேசத் தலைவர்கள் வரலாறு, அறிவியல், விவசாயம், இயற்கை தானியங்கள் உள்ளிட்ட படைப்புகள் இடம் பெற்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

பரிசளிப்பு விழா

மதுரை: அரசு, உதவிபெறும் ஆசிரியர்கள் சார்பில் நடந்த தளகளப்போட்டியின் பரிசளிப்பு விழா பரவை மங்கையர்க்கரசி கல்விக்குழும வளாகத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார். கல்விகுழும தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மேலுார் மாவட்டக் கல்வி அலுவலர் முத்துலட்சுமி, கல்விக்குழும இயக்குநர் சக்திபிரனேஷ் பங்கேற்றனர். விளையாட்டு போட்டியில் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என மூன்று பிரிவுகளில் 30-40, 41-50, 51-60 வயது அடிப்படையில் 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் தடகள லீக் அமைப்பாளர் ராஜேஷ்குமார் செய்திருந்தார். ஆசிரியர்கள் ஜோசப் ரத்தினசாமி, பால்பாண்டி, கலைவாணி ஒருங்கிணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us