முப்பெரும் விழா
மதுரை: மதுரைக்கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் தேசிய இளைஞர் தினம், விவேகானந்தர் பிறந்தநாள் விழா, தகவல் பலகை வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் ரவி தலைமை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன், ரத்தீஸ்பாபு முன்னிலை வகித்தனர். தாளாளர் பார்த்தசாரதி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் தலைமையாசிரியர் முருகேசன், ராஜா, உரத்த சிந்தனை உதயம்ராம், இல.அமுதன், சுப்பையா, காந்திய கல்வி, ஆராய்ச்சி மைய முதல்வர் தேவதாஸ், பேராசிரியர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
தேசிய இளைஞர் தின விழா
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ராஜேந்திரபாபு குடும்பத்தினர் அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் தினவிழா நடந்தது.
விவேகானந்தர் பிறந்தநாள்
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து அச்சம் தவிர் என்ற தலைப்பிலும், குலபதி அத்யாத்மனந்த விவேகானந்தரின் பன்முக தன்மைகள் குறித்தும் பேசினர். செயலர் வேதானந்த முன்னிலை வகித்தார். விவேகானந்தர் படிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். விவேகானந்தர் குறித்து மாணவர்கள் ராஜா, ஜெய்குரு பேசினர். முன்னாள் வரலாற்று துறை தலைவர் நாகேந்திரன், உதவி பேராசிரியர்கள் குமரேசன், பாலமுருகன் துணை முதல்வர் கார்த்திகேயன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெய்சங்கர், அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.