கூடுதல் வகுப்பறைகளுக்கு பூமி பூஜை
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 3ல் புதுஜெயில் ரோட்டில் உள்ள சேதுபதி பாண்டித்துரை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 26 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்தது.
பறவைகள் தினம்
மதுரை: கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக பறவைகள் தினம் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியை அனுசியா வரவேற்றார். பறவைகள் முக்கியத்துவம், மனிதர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து சமூக ஆர்வலர் முரா பாரதி பேசினார். சக்கிமங்கலம் ரோட்டில் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் விதை பந்துகள் துாவப்பட்டன. ஆசிரியர்கள் அருவகம், சித்ரா, தமிழ்ச்செல்வி, அம்பிகா, அகிலா, சுகுமாறன் ஏற்பாடு செய்தனர். ஆசிரியர் மனோன்மணி நன்றி கூறினார்.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
வாடிப்பட்டி: பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை பள்ளி மாணவர்களுக்கு நகரி பிரிட்டானியா நியூட்ரிஷன் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சக்திராஜன், அமுதஸ்ரீ முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராஜா வரவேற்றார். அறகட்டளை திட்ட அலுவலர் ரஞ்சிதா விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். களப்பணியாளர்கள் ஆனந்த், பானுப்ரியா, தேவிப்ரியா, வாஞ்சிநாதன், ஜஹின், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், செந்தில்குமார் பங்கேற்றனர்.
குடியரசு தின அணிவகுப்பில் மதுரை மாணவி
திருமங்கலம்: மத்திய இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் குடியரசு தின விழா அணிவகுப்பிற்காக திருமங்கலம் அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரி பி.ஏ., தமிழ் இலக்கியம் பயிலும் என்.எஸ்.எஸ்., மாணவி சிந்துபைரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கருத்தரங்கு
மதுரை: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு முதல்வர் வானதி தலைமையில் நடந்தது. மலேசியா பல்கலை பேராசிரியர்கள் வெங்கடேசன், பெரியசாமி, லிம்லியன் குவாங்கும், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் ஞானக்குமார், தீபக்குமார் பேசினர். வேதியியல் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர்.