ADDED : ஜன 29, 2024 05:51 AM
மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மேலுார் வட்டார வள மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், ''சொந்த செலவில் மரக்கன்றுகளை வாங்கி பராமரிக்க உறுதிமொழி பெற்று அரசு பள்ளி, கல்லுாரிகளில் நட்டு வருகிறேன்'' என்றார்.
மைய மேற்பார்வையாளர் கீதா, சிறப்பு பயிற்றுநர் டேனியல் தனசீலன், ஆசிரியர் பயிற்றுநர் ஜான்சன், இயற்கை ஆர்வலர்கள் ரமேஷ்குமார், சசிகுமார், சந்திரன் பங்கேற்றனர்.