ADDED : செப் 10, 2025 08:15 AM
அழகர்கோவில் : அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டன. இதில் திருப்பரங்குன்றம் துணை கமிஷனர்சூரிய நாராயணன், கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், ஆய்வர் கார்த்திகா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி,அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணா தேவி, பி.ஆர்.ஓ., முருகன் உடன் இருந்தனர். இதில் ரொக்கம் ஒரு கோடியே பதிமூன்று லட்சத்து 81 ஆயிரம்ரூபாய் இருந்தது.
தங்கம் 77 கிராமும்,வெள்ளி 1 கிலோ 140 கிராமும் கிடைத்தன.