ADDED : செப் 10, 2025 08:15 AM
எழுமலை : எம்.கல்லுப்பட்டி அருகே துள்ளுக்குட்டிநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் 75. இவரது மகன் பாண்டி 50. பெயின்டர் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவு 8.30 மணியளவில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் நடந்த நிலையில் தந்தையை மகன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கையில் இருந்த கத்தியால் குத்தியதில் பாண்டி பலியானார். எம்.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.