/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
ADDED : செப் 04, 2025 05:03 AM

மதுரை: மதுரையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்களின் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்தால் வருவாய் துறை அலுவலக பணிகள் முடங்கின.
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களால் பணிச் சுமை அதிகரித்து விட்டது. இயந்திரகதியில் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல் காதர், இணைச்செயலாளர் இலக்கியா பேசினர்.
தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் ரகுபதி, அரசு ஊழியர் சங்கத் தலைவர் தமிழ், செயலாளர் சந்திரபோஸ், மத்திய செயற்குழு உறுப்பினர் செந்தில் வள்ளி பங்கேற்றனர்.