வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை
ADDED : ஜன 04, 2024 02:41 AM

மதுரை: மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மாலை அணிவித்தனர். எம்.எல்.ஏ., தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமச்சந்திரன் கூறுகையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உரிய மரியாதை அளிக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு நினைவிடம் அமைத்தார்.
சமுதாய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது என்றார்.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். செல்லுார் ராஜூ கூறுகையில், தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அ.தி.மு.க., ஆட்சியில் மணிமண்டபங்கள், நினைவிடங்கள் கட்டப்பட்டன. ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றார்.
ம.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., பூமிநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர் செயலாளர் முனியசாமி, மாவட்ட செயலாளர்கள் மார்நாடு, ஜெயராமன், தொழிற்சங்க மாநில நிர்வாகி மகபூப்ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாடிப்பட்டி
நாயுடு மகாஜன சங்கம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் பொன் கமலக்கண்ணன், நிர்வாகிகள் புருஷோத்தமன், கோவிந்தன், குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.