ADDED : மார் 19, 2025 05:02 AM
தேனி : தேனி மாவட்டம் மேல்மங்கலத்தை சேர்ந்தவரின் நிலத்தை மோசடி செய்ததாக மதுரையை சேர்ந்த ஈஸ்வரன் உட்பட 9 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர்.
மார்ச் 17 ல் ஈஸ்வரனை கைது செய்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயமணி முன் ஆஜர்படுத்தினர். பின் அவரை ஜாமினில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் சிறையிலடைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது.