/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில்அறுபடை வீடு 'மினியேச்சரை' அனுமதிக்க வழக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: -நீதிபதி கருத்து மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில்அறுபடை வீடு 'மினியேச்சரை' அனுமதிக்க வழக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: -நீதிபதி கருத்து
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில்அறுபடை வீடு 'மினியேச்சரை' அனுமதிக்க வழக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: -நீதிபதி கருத்து
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில்அறுபடை வீடு 'மினியேச்சரை' அனுமதிக்க வழக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: -நீதிபதி கருத்து
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில்அறுபடை வீடு 'மினியேச்சரை' அனுமதிக்க வழக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: -நீதிபதி கருத்து
ADDED : ஜூன் 07, 2025 06:50 AM
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவ போலீசார் அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு: ஹிந்துக்களிடம் பக்தியை அதிகரிக்கும் நோக்கில் மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் ஜூன் 22 ல் 'முருக பக்தர்கள்' மாநாடு நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட உள்ளன. அவற்றின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்து பக்தர்களுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 22 வரை தினமும் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணிவரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை விளக்கி, தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவுள்களுக்கு பூஜை செய்து, பிரசாதம் வழங்கப்படும்.
முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி வடிவங்களை அமைக்க அனுமதிக்க போலீஸ் கமிஷனர், அண்ணாநகர் போலீசாருக்கு மனு அனுப்பினோம். அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்தார். அப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை போலீசார் மிரட்டினர். நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்களை அமைக்க, பூஜை நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பு: மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது சில விளக்கங்கள் கோரப்பட்டன. அதற்கு பதில் இல்லை. மனு நிலுவையில் உள்ளது. மினியேச்சர்கள் வைப்பதற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதித்தால் அருகிலுள்ள வீடுகள், பள்ளிகளுக்கு இடையூறு ஏற்படும்.
மனுதாரர் தரப்பு: மினியேச்சர்கள் வைப்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.
நீதிபதி: மதுரையில் பல மாநாடுகள் நடத்த போலீசார் அனுமதித்துள்ளனர். தற்போது மனுதாரர் தரப்பு மினியேச்சர்கள் நிறுவ, பக்தர்களை வழிபட அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. இது ஜனநாயக நாடு. போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புத் தன்மையுடன் செயல்படக்கூடாது.
அரசு தரப்பு: போலீசார் அரசியல் சார்புடன் செயல்படவில்லை. நிர்வாக ரீதியாக செயல்பட்டு முடிவு மேற்கொள்கின்றனர்.
நீதிபதி: போலீஸ் கமிஷனர் ஜூன் 9 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.