/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ராமேஸ்வரம் - சர்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கம் ராமேஸ்வரம் - சர்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கம்
ராமேஸ்வரம் - சர்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கம்
ராமேஸ்வரம் - சர்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கம்
ராமேஸ்வரம் - சர்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஜூன் 07, 2025 06:49 AM
மதுரை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க ராமேஸ்வரம் - தெலுங்கானா மாநிலம் சர்லப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 11, 18, 25ல் மாலை 4:45 மணிக்கு சர்லப்பள்ளியில் இருந்து புறப்படும் ரயில் (07695), மறுநாள் இரவு 11:55 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.
மறுமார்க்கத்தில் ஜூன் 13, 20, 27ல் காலை 9:10 மணிக்கு இங்கிருந்து புறப்படும் ரயில் (07696) மறுநாள் மாலை 5:45 மணிக்கு சர்லப்பள்ளி செல்லும்.
இவ்விரு ரயில்களும், ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி வழியாக செல்லும்.
ஒரு ஏ.சி., முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இவற்றுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.