/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் 'மக்கள் சந்திப்பு' நடைபயணம் மதுரையில் 'மக்கள் சந்திப்பு' நடைபயணம்
மதுரையில் 'மக்கள் சந்திப்பு' நடைபயணம்
மதுரையில் 'மக்கள் சந்திப்பு' நடைபயணம்
மதுரையில் 'மக்கள் சந்திப்பு' நடைபயணம்
ADDED : ஜூன் 14, 2025 05:32 AM
மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 'மக்கள் சந்திப்பு நடைபயணம் - பிரசாரம்' நேற்று நடந்தது.
மாநிலக் குழு உறுப்பினர் பாலா கூறியதாவது: மத்திய, மாநில அரசு பணியிடங்களை நிரப்புவது, வக்ப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது, நுாறுநாள் வேலை திட்டத்தை மாநகராட்சியில் அமல்படுத்துவது, வரிவிதிப்பை குறைப்பது, ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றுவது, பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 3 நாள் நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனையூர், விளாங்குடி, வண்டியூர், திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவது, சாலை, குடிநீர் போன்ற அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தருவது ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முதல்நாள் நடை பயணம் மதுரை புறநகர் கிழக்கு மண்டலக்குழு சார்பில் வண்டியூர் முதல் விளாங்குடி வரை நடந்தது.
இதில் செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலைச் செல்வன், கண்ணன், தனசேகரன் பங்கேற்றனர்.