/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உசிலம்பட்டியில் ஆலோசனை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உசிலம்பட்டியில் ஆலோசனை
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உசிலம்பட்டியில் ஆலோசனை
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உசிலம்பட்டியில் ஆலோசனை
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உசிலம்பட்டியில் ஆலோசனை
ADDED : ஜூன் 14, 2025 05:32 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியில் சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டுக்கு கொடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
துணைத் தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிகுமார் மற்றும் அலுவலர்கள், கவண்டன்பட்டி கிராமத்தினர் பங்கேற்றனர். நகராட்சியின் 10க்கும் மேற்பட்ட வார்டுகளின் கழிவுநீர் தற்போது கவண்டன்பட்டி ஊருணியில் சேர்கிறது.
அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து, சுத்திகரித்த நீரை விவசாய பயன்பாட்டுக்கு வழங்க பணிகள் நடக்க உள்ளது. கவண்டன்பட்டி மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், 'கவண்டன்பட்டி ஊருணி வழியாக வடுகபட்டி கண்மாய் செல்லும் 45 அடி அகல ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். ஓடையை சீரமைத்தபின் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் குறித்து ஆலோசனை நடத்தலாம். ஓடைக்குள் கழிவு நீர் கலக்கும் பகுதியிலேயே மையம் அமைத்து, சுத்திகரித்து ஓடையில் விடலாம் என்றனர். இதையடுத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் பதிலளித்தனர்.