/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு பொதுமக்கள் அச்சம் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு பொதுமக்கள் அச்சம்
ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு பொதுமக்கள் அச்சம்
ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு பொதுமக்கள் அச்சம்
ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு பொதுமக்கள் அச்சம்
ADDED : மே 30, 2025 03:54 AM

மதுரை: மதுரை தெப்பக்குளம் புது ராமநாதபுரம் ரோடு பகுதியில் சாயப்பட்டறையின் ரசாயன கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக இப்பகுதியில் சாயப்பட்டறை செயல்படுகிறது. இங்கு வெளியேறும் ரசாயன கழிவுகளை அந்த வளாகத்துக்குள்ளேயே தினமும் விடுகின்றனர்.
சுத்திகரிப்பு செய்யப்படாததால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது. தற்போது வீடுகளின் ஆழ்குழாய் நீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் தோல், அலர்ஜி பிரச்னை ஏற்படுகிறது.
நீர் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும். மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.
சாயப்பட்டறை தரப்பில் கேட்டபோது, ''உரிமம் பெற்று நடத்தி வருகிறோம். கழிவுநீரை சுத்திகரித்து மறு உபயோகத்துக்கு பயன்படுத்துகிறோம். கழிவென வெளியேறும் குறைந்த அளவு நீரையும் தோட்டத்துக்கு பயன்படுத்துகிறோம். எந்த விதிமீறலும் இல்லை'' என்றனர்.