ADDED : ஜன 08, 2024 05:46 AM

மதுரை, : மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி சார்பில் 'மதுரை மக்களோடு மகாலட்சுமி' எனும் எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தொடர்ந்து 8 வது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியை மதுரை ஆதினம் ஆசி வழங்கி துவக்கி வைத்தார்.
இதில் சவுராஷ்டிரா வர்த்தக சங்க முன்னாள் தலைவர் கலாதர்பாபு, மடீட்சியா டிரஸ்ட் சேர்மன் அரவிந்த், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர், தொழிலதிபர் சுப்புக்காளை மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில் பெண்களுக்கு இலவச தையல் மிஷின், மருத்துவ உதவித்தொகை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, சலவைத் தொழிலாளர்களுக்கு அயர்ன் பாக்ஸ் மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை வெங்கடேஷ் ஒருங்கிணைத்தார்.