ADDED : ஜன 08, 2025 06:36 AM

உசிலம்பட்டி: கருமாத்துாரில் ஆவின் பால் குளிரூட்டும் மையம் முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன், இலவசமாக பால் வழங்கி ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தினர்.
நிர்வாகிகள் கருமாத்துார் முத்துப்பாண்டி, மாதரை வெண்மணி சந்திரன், மானுாத்து மகேந்திரன், ஜெயபாண்டி, மா.கம்யூ., முருகன், விக்கிரமங்கலம் ரவி, கேசம்பட்டி ஜெயக்குமார், வடக்கம்பட்டி குருசாமி, ரவி, ஜெயராஜ், தளபதி, ராமர் பங்கேற்றனர். பசும்பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்கவும், ஆண்டுதோறும் பாலுக்கு விலை நிர்ணயம், 50 சதவீத மானியத்தில் தீவனம், ஆவின் நிர்வாகம் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கிராமச் சங்கங்களில் பால் ஏற்றும் இடத்திலேயே எடை, தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும், சத்துணவு மையங்களில் பால் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அந்தப் பகுதி மக்களுக்கு இலவசமாக ஒரு லிட்டர் பால் வழங்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.