ADDED : செப் 11, 2025 05:12 AM
மதுரை : மதுரை ஒத்தகடை வேளாண் கல்லுாரி எதிரில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நபார்டு வங்கியின் மாபிப் ஊக்குவிப்பு மையம், நபார்டு புவிசார் குறியீட்டு மைய துவக்க விழா நடந்தது.
வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன், நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் ஆனந்த் தலைமை வகித்தனர்.
பல்கலை டி.ஏ.பி.டி. மைய இயக்குநர் சோமசுந்தரம், கல்லுாரி டீன் மகேந்திரன், சமுதாய அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா, வேளாண் துறை இணை இயக்குநர் முருகேசன், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, நபார்டு வங்கி மதுரை கோட்ட மேலாளர் சக்திபாலன் கலந்து கொண்டனர்.