ADDED : செப் 03, 2025 05:51 AM
பாலமேடு : பாலமேடு பேரூராட்சியில் 7 வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், செயல் அலுவலர் சசிகலா, தாசில்தார்கள் ராமசந்திரன், பார்த்திபன், தி.மு.க.,அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன் வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் சுமதி, துணைத் தலைவர் ராமராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், அருண்விஜயன், அணி நிர்வாகிகள் தவசதிஷ், சந்தன கருப்பு, பாண்டி பங்கேற்ற னர்.
மொத்த மனுக்கள் 254ல் 148 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்டது.