ADDED : ஜூன் 28, 2025 12:55 AM
வாடிப்பட்டி:வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை, திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா, அரசு பொதுத்தேர்வில் 10 , 12 ஆம் வகுப்புகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசளிப்பு விழா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் விஜயரங்கன், இலக்கிய மன்ற துணைச் செயலாளர் தங்கராசு, நுாலகர் அருள் சகாயராஜ் முன்னிலை வகித்தனர்.
பேரவைத் தலைவர் பனகல் பொன்னையா வரவேற்றார்.
செல்வகுமார், 'காலத்தை வென்ற கவிஞர்' தலைப்பில் பேசினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாபு, கவுரிநாதன், மது, பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். சந்திரசேகர் நன்றி கூறினார்.