ADDED : ஜூன் 14, 2025 05:31 AM
மதுபாட்டிலுடன் ஒருவர் கைது
உசிலம்பட்டி: சில நாட்களுக்கு முன்பு நந்தவனத்தெருவில் எம்.சாண்டுக்குள் பதுக்கி வைத்திருந்த 52 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். அதனருகில் உள்ள 5559 எண் கொண்ட டாஸ்மாக் கடை அருகே மீண்டும் மதுபாட்டில்களை பதுக்கி விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை நடத்தினர். கருக்கட்டான்பட்டி சோணை முத்தையாவிடம் 55, நுாறு மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
கஞ்சாவுடன் இருவர் கைது
உசிலம்பட்டி: கீரிபட்டி அருகே போலியம்பட்டியில் தனிப்பிரிவு போலீசார் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 2 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் இருந்த கீரிபட்டி காமாயி என்ற கந்தம்மாள் 57, மேக்கிழார்பட்டி முத்துப்பாண்டி 27, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.